Random image

தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்… வேதாகோபாலன் (தனுசு, மகரம், கும்பம், மீனம்)

மிழ் ஆண்டு வரிசைப்படி,  அட்டவணையில் 34வதாக வரக் கூடிய சார்வரி வருடம் 2020 ஏப்ரல் 13ம் தேதி இரவு 7.20க்கு கிருஷ்ணபட்சம், சஷ்டி திதி, மூல நட்சத்திரத்தின் 4ம் பாதத்தில் துவங்குகிறது. தமிழ் ஆண்டு வட்ட அட்டவணையில் 34வதாக வரக் கூடிய சார்வரி வருடம் 2020 ஏப்ரல் 13ம் தேதி இரவு 7.20க்கு கிருஷ்ணபட்சம், சஷ்டி திதி, மூல நட்சத்திரத்தின் 4ம் பாதத்தில் துவங்குகிறது.

தற்போது நமது நாட்யை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும்  நோய்க் கிருமிகளின் தாக்கம் மே மாத இறுதியில்  குறையும், ஆனால் மீண்டும் சில கிருமிகள் உருவாக வாய்ப்புள்ளது. இயற்கை பேரிடர் ஏற்பட வாய்ப்புள்ளது என, பஞ்சாங்கக் குறிப்புகள் கூறுகின்றன. ஓரளவு மழை பெய்து பயிர் செழித்தாலும் பற்றாக்குறை இருக்க வாய்ப்புள்ளது. ஆனால்.. அனைத்து சிரமங்களிலிருந்தும் மீண்டு வெளிவருவோம்.

தெய்வ வழிபாடும் ஆன்மிக நம்பிக்கையும் நம்மையெல்லாம் காப்பாத்தப்போகுதுங்க.

தனுசு

குடும்ப முன்னேற்றம் கூடுதலாயிருக்கும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். சென்ற வருடம் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும். தாய் மற்றும் உடன்பிறப்புகளின் ஆதரவு உண்டுங்க. தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. லேடீஸ் புகுந்த வீட்டிற்கு பெருமை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களாக இருந்தால் உயர்பதவிகள் தானாகக் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி நீங்கள் எடுத்த முயற்சிங்க வெற்றி தரும். திருமணமாகி குழந்தைப்பேறு எதிர்பார்த்து காத்திருக்கும் பெண்களுக்கு மக்கட்பேறு கிடைக்கும் வாய்ப்பு உண்டுங்க. பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். குரு வழிபாடும் சர்ப்ப கிரக வழிபாடும் உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். குடும்பத்தில் அரை குறையாக நின்ற காரியங்கள் நிறைவேறும். அலுவலகங்களிலோ, வங்கிகளிலோ பலமுறை விண்ணப்பித்தும் இதுவரை கிடைக்காத தொகை, தற்போது வந்து சேரும். கடன் சுமை முற்றிலும் குறையக் கூடிய நல்ல வாய்ப்பு உருவாகும். பெற்றோர் வழியிலும் எதிர்பார்த்த நற்பலன் கிடைக்கும். உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும். தூர தேசத்தில் இருந்து வருமுங்க தகவல் ஒன்று, உங்களின் தொழிலை மேம்படுத்தும்.

பரிகாரம் : அம்பிகை வழிபாடு சகல நன்மை தரும்.    

மகரம்

குடும்பப் பிரச்சினை, ஒரு வழியாக நல்ல முடிவிற்கு வருமுங்க. கடன்கள் படிப்படியாக குறையும். சுப காரியங்களுக்காக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். உற்றார், உறவினர்கள் உங்களுக் குச் சாதகமாக நடந்துகொள்வர். முக்கியப் புள்ளிகள், உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர். செல்வாக்கு உயரும். தந்தை வழியில் ஒத்துழைப்பு உண்டுங்க. மூத்த சகோதரத்தால் முன்னேற்றம் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் வந்து சேரும். வாகனம் வாங்கி மகிழும் யோகம் உண்டுங்க. உடன்பிறப்புகளின் இல்லத்து சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீங்க. தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் காலம் இது. உங்கள் திறமை பளிச் சிடும். உத்தியோகத்தில் மேலதி காரிகளின் ஆதரவு அதிகரிக்கும். சக பணியாளர்களுடன் ஏற்பட்ட பகை மாறும். உத்தியோகம் தொடர்பாக வெளிநாட்டு யோகம் கூட ஒரு சிலருக்கு கிடைக்கலாம். துணிந்து எடுத்த முடிவால் தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும். எதிரிகள் சரணடைவர். அதிகாரப் பதவியில் இருப்பவர்களது ஆதரவைப் பெறுவீங்க. பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம். இடம் வாங்கும் யோகம் உண்டுங்க. உத்தியோகத்தில் உள்ளவங்களுக்கு தலைமைப் பொறுப்புகள் கிடைக்குமுங்க.  கல்வி முன்னேற்றம் கைகூடும். குழந்தைங்க இசை, நடனம் போன்ற கலைகளில் ஈடுபட்டு புகழையும், செல்வத்தையும் பெற்றுத் தருவாங்க.

பரிகாரம் : பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.

கும்பம்

ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும். சென்ற ஆண்டை காட்டிலும் இப்பொழுது சில பிரச்சினைகள் புதிதாக வந்து ஊடுருவும். கவலை அகல, வழிபாட்டை முறையாக மேற்கொள்ளுங் கள். திடீரென மாற்றங்களும், ஏற்றங்களும் வந்துகொண்டே இருக்கும். குடும்ப பிரச்சினைகளை  தக்க சமயத்தில் சமாளிப்பது நல்லது. பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் – மனைவிக்குள் ஒற்றுமை ஏற்பட, விட்டு கொடுத்து செல்ல வேண்டும். குடும்ப ரகசியங்களை மூன்றாம் நபரிடம் சொல்ல வேண்டாம்.  உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு ஓரளவே கிடைக்கும். பிள்ளைகளை உங்களின் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. ஆபரண சேர்க்கை உண்டுங்க. எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறப்புகள் உறுதுணைபுரிவர். தொழில் வளர்ச்சி மேலோங்கும். லாபம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாக கிடைக்கும். சிந்தித்து செயல்பட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். வேலை நிமித்தமாக வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு உருவாகும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையோடு விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உடல் நிலையில் கொஞ்சம் கவனம் தேவை. அடிக்கடி கடன் தொல்லைகளால் அவதிப்படலாம். குரு பார்வை இருப்பதால் பணப் புழக்கம் நன்றாக இருக்கும். தாய்வழி ஆதரவு கிடைக்கும். இதுவரை செய்த பரிகாரங்களுக்குப் பலன் கிடைத்து மணவாழ்க்கை அமையும்.கணவன்- மனைவிக்குள் அன்பும், பாசமும் கூடும். அடகு வைத்த நகைங்களை மீட்டுக்கொண்டு வந்துடுவீங்க. சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டுங்க. மகன்/ மகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். 

பரிகாரம் : மீனாட்சி வழிபாடு சுபவாழ்வு தரும்.

மீனம்

உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும் என்றாலும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மிகச் சிறப்பாகச் செய்து, அதிகாரி களின் பாராட்டுகளைப் பெறுவீங்க. சிலருக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற பலன்கள் கிடைக்கும். எதிலும் வெற்றியே ஏற்படும். எதிரிகள் பணிந்து போவர். அவர்களால் மறைமுக ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டுங்க. ஆனால், வருடத்தின் பிற்பகுதியில் சகோதரர் களுடன் சிறுசிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டு சரியாகும். அலுவலகத்தில் அதிக பணிச்சுமை ஏற்படுவதால், மனதில் சோர்வும், உடல் அசதியும் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது எதிர்காலத்துக்கு நல்லது. சிலருக்கு திடீர் இடமாற்றம்,. பணிமாற்றம் ஏற்படக்கூடும். எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைப்பதில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது. உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை காணப்படுகிறது. ஆனாலும், மறைமுகப் பிரச்னைகளைச் சமாளிக்கவேண்டி இருக்கும். வருஷத்தின் பிற்பகுதியில் கொடுக்கல் – வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கை அவசியம். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் சாமர்த்தியமாகப் பேசி வாய்ப்புகளைப் பெறுவாங்க. கலைஞர்களுக்கு சக கலைஞர்களாலும் நன்மைகள் ஏற்பட சாத்தியம் உள்ளது.

பரிகாரம் : விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

முற்றும்.