அமெரிக்க வாழ் தமிழர் ராஜ் ஐயர் அமெரிக்க ராணுவ தலைமை தகவல் அதிகாரி ஆகிறார்

வாஷிங்டன்

மெரிக்க வாழ் தமிழரான ராஜ் ஐயர் ராணுவ மிக உயரிய பதவியான தலைமை தகவல்  அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் திருச்சியைச் சேர்ந்த டாக்டர் ராஜ் ஐயர் அங்குள்ள தேசிய தொழில் நுட்ப மையத்தில் பட்டப்படிப்பை முடித்து அதன்  பிறகு பெங்களூருவில் பணி ஆற்றியவர் ஆவார். அதன் பிறகு அவர் மின் பொறியியல் படிப்பில் பி எச் டி ஆய்வை முடித்துள்ளார்.  இவர் அதன் பிறகு அமெரிக்காவுக்குச் சென்று பணியாற்றத் தொடங்கினார். இவர் அமெரிக்க ராணுவ செயலருக்கு ஆலோசகராக பணியாற்றி உள்ளார்.

தற்போதைய அமெரிக்க அரசு இவரை ராணுவத்தின் மிக உயரிய பதவியான தலைமை தகவல் அதிகாரியாக நியமித்து ள்ளது.  இந்த பதவி 3 நட்சத்திர தளபதி பதவிக்கு ஒப்பானதாகும்.   இவருக்குக் கீழே 15000 வீரர்கள் உலகெங்கும் உள்ள 100 நாடுகளில்  பணியாற்ற உள்ளனர்.  இவர் 1600 கோடி டாலர் மதிப்பிலான ராணுவ தளவாட கொள்முதலை  மேற்பார்வை செய்ய உள்ளார்., இவர் கடந்த 26 வருடங்களாக அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி பிருந்தா  தகவல் தொழில்நுட்ப சுகாதார தொழில் நிபுணர் ஆவார்.  இவரும் அமெரிக்க அரசில் பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். மூத்தவர் அஷ்வின் ஐயர் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பை தற்போது முடித்துள்ளார். இரண்டாம் மகன் அபிஷேக் ஐயர் மேரிலாண்ட் காண்டினெண்டல் உயர்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

இந்தியர் ஒருவர் இந்த  பணிக்கு நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்