ராதாகிருஷ்ணா ரெட்டி இயக்கத்தில் வெளியான கன்னடப் படம் ‘மாயாபஜார் 2016’. க்ரைம் காமெடி பாணியிலான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதன் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றி தயாரித்து வருகிறார் இயக்குநர் சுந்தர்.சி.
பத்ரி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் பிரசன்னா, ஷாம், ஸ்ருதி மராத்தே, அஸ்வின், யோகி பாபு, விடிவி கணேஷ், ரித்திகா சென் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
ஒளிப்பதிவாளராக கிச்சா, இசையமைப்பாளராக சத்யா, கலை இயக்குநராக ப்ரேம் ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடையவுள்ளதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.