தமிழ் ராக்கர்ஸ் நிரந்தரமாக மூடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்….!

தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் என அத்தனை மொழிகளிலும் வெளியாகும் புதிய படங்களை, வெளியான ஒரு சில மணி நேரத்தில் திருட்டு தனமாகப் பதிவேற்றிய இணையதளம் தமிழ் ராக்கர்ஸ்.

அமேசான், நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட தளங்களில், குறைந்த விலைக்கு வெளியாகும் திரைப்படங்களைக் கூட பலர் தமிழ் ராக்கர்ஸ் மூலம் பார்த்து வந்தனர்.

இந்நிலையில், திங்கட்கிழமையன்று (அக்டோபர் 19) தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் நிரந்தரமாக மூடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்பட்டது. இது வைரலாகி, பலரும் தமிழ் ராக்கர்ஸ் தளத்தை இயக்க முயன்று, அந்த இணைப்பு கிடைக்காமல் வந்த செய்தியை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துப் பகிர ஆரம்பித்துள்ளனர்.