இணையத்தில் சர்கார் படம் ரிலீஸ்: இதுவரை பார்த்தவர்கள் 9.5 லட்சம் பேர்

விஜய் நடித்து இன்று வெளியான  சர்கார் திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையில்  அப்படத்தை இணைதளத்தில் வெளியிட்டுள்ளது தமிழ்ராக்கர்ஸ்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியாகி தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியாகி உள்ள திரைப்படம் சர்கார்.  இந்தப் படத்தை திரையரங்குகள்  தவிர வேறு எந்த வடிவத்திலும் வெளியிடக்கூடாது என படத்தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அதில், சர்கார்  படத்தின் விநியோகம், சிடி, டிவிடி, கேபிள் டிவி, இணையதள ஒளிபரப்பு உள்ளிட்ட அனைத்து உரிமங்களும் தங்களிடமே இருப்பதாகவும் திரையரங்கம் தவிர வேறு எந்த வடிவிலும் சர்கார் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம்  சர்கார் படத்தை இணையதளத்திலோ, சேனல்களிலோ, செல்போனிலோ, சிடி, டிவிடி, கேபிள் டிவியிலோ வெளியிடக்கூடாது எனத் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்தநிலையில் ;சர்கார் படத்தின் எச்.டி பிரிண்ட் விரைவில் இணைதளத்தில் வெளியிடப்படும் என தமிழ்ராக்கர்ஸ் பெயரில் நேற்று ட்வீட் செய்யப்பட்டது. அதே போல சர்கார் படத்தை இணையதளத்தில் முறைகேடாக வெளியிட்டுள்ளது தமிழ்ராக்கர்ஸ்.

 

இதுவரை இப்படத்தை சுமார் பத்துலட்சம் பேர் பார்த்திருப்பதாக கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Tamil rockers released Sargar in the Internet : Over 9.5 lakh people have seen it, இணையத்தில் சர்கார் படம் ரிலீஸ்: இதுவரை பார்த்தவர்கள் 9.5 லட்சம் பேர்
-=-