சர்கார் படத்தின் எச் டி பிரிண்ட் வெளியிடுவோம் : தமிழ் ராக்கர்ஸ் அறிவிப்பு

சென்னை

மிழ் ராக்கர்ஸ் இணைய தளம் சர்கார் படத்தின் எச் டி பிரிண்டை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது.

பல புதிய படங்களை தமிழ் ராக்கர்ஸ் இணைய தளம் வெளிவந்த உடன் வெளியிட்டு வருகிறது. இதற்கு தமிழ் திரையுலகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. முதலில் சாதாரண பிரிண்டை வெளியிடும் இந்த இணைய தளம் சில நாட்களுக்குள் எச் டி பிரிண்டை வெளியிடுவதும் வழக்கமாக உள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள சர்கார் படம் நாளை தீபாவளி அன்று வெளிவர உள்ளது. இந்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கி உள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகி உள்ள இப்படத்தில் விஜௌ, கீர்த்தி சுரேஷ், ராதாரவி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இன்று தமிழ் ராக்கர்ஸ் இணைய தளம் தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் காலை 11.30 மனி அளவில் ஒரு பதிவு இட்டுள்ளது. அந்த பதிவில் “Sarkar HD Print.coming” என குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தில் சர்கார் திரைப்பட எச் டி பிரிண்ட் வெளிவருவது உறுதியாகி உள்ளது