பெயர் பலகைகளில் தமிழுக்கே முக்கியத்துவம் – தமிழக அரசு திடீர் உத்தரவு!

சென்னை: தமிழ் மொழியின்பால் திடீரென திரும்பியுள்ள தமிழக அரசு, வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழ் மொழிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

கடைகள், நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற உத்தரவை தமிழக அரசு திடீரெனப் பிறப்பித்துள்ளது.

அதேசமயம், தமிழ் தவிர பிறமொழிகளை பெயர் பலகைகளில் உபயோகிக்கும் நிலை வந்தால், ஆங்கிலத்திற்கு இரண்டாமிடத்தையும், பிற மொழிகளுக்கு மூன்றாமிடத்தையும் ஒதுக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

பெயர் பலகை வைப்பது குறித்த சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை எனில், நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில், தமிழை முதன்மைப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகளும், நடவடிக்கைகளும், போராட்டங்களும் நீண்ட ஆண்டுகளாக நீடித்துவரும் ஒன்றாக உள்ளது.

You may have missed