ஆஹா ஓடிடி தளத்தில் முழுக்க முழுக்க தமிழ் நடிகர்கள் நடிக்கும் தெலுங்கு வெப் சீரிஸ்….!

2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை, நெட்ஃபிளிக்ஸில் புதிதாக 1 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இணைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு பல்வேறு ஓடிடி தளங்களும் புதிய தொடர்கள், திரைப்படங்கள் என்று போட்டி போட்டு வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆஹா எனும் தெலுங்கு ஓடிடி தளம் தற்போது ஒரு புதிய வெப் சீரிஸை தயாரித்து வருகிறது. சென்னையில் படமாக்கப்பட்டுவரும் இந்த தொடரில் பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார், கிஷோர், ரோகிணி, ஜெயப்பிரகாஷ், அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இதில் பிரசன்னா நடிக்கும் ஒரு எபிசோடை ‘கே13’ படத்தை இயக்கிய பரத் நீலகண்டன் இயக்கி வருகிறார். இந்த வெப்சீரிஸ் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.