நொய்டா: புரோ கபடி போட்டித் தொடரின் 7வது சீசனில், வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று, கலந்துகொண்ட அணிகளிலேயே கடைசி இடம் பெற்று தமிழகம் திரும்புகிறது தமிழ் தலைவாஸ் அணி.

இத்தொடரில் மொத்தம் 12 அணிகள் மோதின. ஒவ்வாரு அணியும் பிற அணியுடன் தலா 2 முறை மோதும். இந்த வகையில், தமிழ் தலைவாஸ் அணி விளையாடி 22 போட்டிகளில் மொத்தம் 4 போட்டிகளில் மட்டுமே வென்றது.

3 போட்டிகள் ‘டை’ ஆன நிலையில், தோற்றப் போட்டிகளின் எண்ணிக்கை 15. தமிழ் தலைவாஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியிலும், இரண்டாவது பாதியில் சொதப்பிய அணி, மோசமான தோல்வியை சந்தித்தது.

இத்தொடரில், டெல்லி, ஹரியானா, பெங்கால் வாரியர்ஸ், மும்பை, பெங்களூரு மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய அணிகள் பிளே ஃஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. தமிழ் தலைவாஸ் அணி பெற்ற புள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 37 மட்டுமே. இதற்குமுன் பங்கேற்ற கடைசி 2 சீசன்களில் இதைவிட சற்று மேம்பட்ட பங்களிப்பை ஆற்றியிருந்தது அந்த அணி.