சாகித்ய அகாடமி விருது பெற்ற மேலாண்மை பொன்னுசாமி மரணம்

சென்னை

புகழ் பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி மரணம் அடைந்தார்.

தமிழ்மொழியின் புகழ் பெற்ற எழுத்தாளகளில் ஒருவர் மேலாண்மை பொன்னுசாமி.   இவர் 1951 ஆம் வருடம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேலமலைநாடு கிராமத்தில் பிறந்தவர்.   இவரால் தனது ஏழ்மை காரணமாக தனது 5ஆம் வகுப்புக்கு மேல் பள்ளியில் பயில  முடியவில்லை.   இவர் தந்தை இவரது 10ஆம் வயதில் இறந்ததில் இருந்து குடும்பப் பொறுப்பை இவர் ஏற்றுக் கொண்டார்.  தனது கிராமத்தில் ஒரு சிறு மளிகைக் கடையை தனது சகோதரருடன் இணைந்து நடத்தி வருகிறார்.

பள்ளிக் கல்வியை நிறுத்தினாலும் நூல்களை படிப்பதை நிறுத்தாமல் இலக்கிய நூல்களை விரும்பிப் படித்து வந்தார்.  இவர் இடது சாரி அமைப்பை சேர்ந்தவர்.    இதுவரை 22 சிறுகைதை தொகுப்புகள், 6 நாவல்கள், 6 குறுநாவல் தொகுப்புகள் ஆகியவற்றை எழுதி உள்ளார்.   இவரது சிறுகதைத் தொகுப்பு நூலான மின்சாரப்பூ என்னும் நூலுக்கு 2007ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.   இது தவிர பல பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் தனது உடல்நலக்குறைவால் இன்று மரணம் அடைந்தார்.  இவருக்கு பொன்னுத்தாய் என்னும் மனைவி, 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மற்றும் கலைஞர்கள் சங்கத்தில் முக்கிய பொருப்புகளை மேலாண்மை பொன்னுசாமி வகித்து வந்தார்.  அவரது மரணம் இலக்கிய உலகில் பெரும் சோகத்தை உண்டாக்கி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.