தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஸ்டான்லி மருத்துவமனையில் மீண்டும் அனுமதி

சென்னை:

மிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்  வேல்முருகன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட  வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஏற்கனவே சிறுநீரக பிரச்சினை காரணமாக மருத்துவ மனையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையில், அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுமீதான விசாரணையில், சென்னை உயர்நீதி மன்றம் நெய்வேலி, உளுந்தூர் பேட்டை காவல் ஆய்வாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது. அதன் மீதான விசாரணை இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், வேல்முருகன் இன்று மீண்டும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  காது தொடர்பான  பிரச்சினை காரணமாக,  ஸ்டான்லி மருத்துவமனையில் வேல்முருகன் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.