டெல்லி: ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்த தமிழக மாணவி தற்கொலை!!

டெல்லியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். ஐஏஎஸ் கனவுடன் படிக்க சென்ற மாணவி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

srimathi

தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலர், வடமாநிலங்களில் படித்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு மன உளைச்சல்களுக்கு உள்ளாவதாக கூறப்படுகிறது. இதற்கு அங்கு இருக்கும் சூழல்களே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவி, டெல்லியில் உள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஸ்ரீமதி தங்கி உள்ள விடுதியில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணம் உடனடியாக தெரியவில்லை.

ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டது குறித்து அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதன்பிறகு ஸ்ரீமதி இறந்த சம்பவம் அவரது பெற்றோருக்கு டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இன்று காலை கோவை சென்று அங்கிருந்து விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். ஐ.ஏ.எஸ் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சத்தியமங்கலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் உயிரிழந்த ஸ்ரீமதி கடந்த சில நாட்களாக மன உளைச்சலுக்கு உள்ளானவர் போல் காணப்பட்டதாக டெல்லி போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனை முடிந்து ஸ்ரீமதியின் உடல் அவரது உறவினர்களிடம் இன்று பிற்பகல் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து பதப்படுத்துவதற்காக (எம்பால்மிங்) எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

எம்பால்மிங் முடிந்த பின்னர் ஸ்ரீமதியின் உடல் தமிழ்நாட்டில் உள்ள அவரது சொந்த ஊருக்கு இன்றிரவுக்குள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.