ரஜினியை கழுவி ஊற்றிய தமிழருவி மணியன்…. வைரலாகும் வீடியோ…..

சென்னை:

ஜினி அரசியலுக்கு வருவார் என பல ஆண்டுகளாக கூறி வரும், தமிழருவி மணியன், சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினியை கடுமையாக விமர்சிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது….

கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ந்தேதி அன்று, தான் அரசியலுக்கு வரப்போவதாகவும், தனது அரசியல் ஆன்மிக அரசியல் என்றும் கூறி அவரது ரசிகர்களியே பரபரப்பை ஏற்படுத்தினார்  ரஜினி. ஆண்டுகள் சில கடந்தோடிவிட்ட நிலையில், அவர் அரசியல் வருவதற்கான எந்த அறிகுறிகளும் இதுவரை தெரியவில்லை…

ஆனால், ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும் ‘காந்திய மக்கள் இயக்க’த்தின் நிறுவனத் தலைவருமான தமிழருவி மணியன், நடிகர் ரஜினிகாந்த் குறித்தும், அவரது அரசியல் பிரவேசம் குறித்தும்  அவரது மக்கள் தொடர்பு அலுவலர்  போல செயல்பட்டு அவ்வப்போது செய்தியாளர்களுக்கு தீணி போட்டு வந்தார்.

இது சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தது. செய்தியாளர்களும் தமிழருவி மணியனும் ரஜினி குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தனர். கடந்த ஜனவரி மாதம் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தவர், ரஜினி தொடங்கப்போகும்  கட்சியின் பெயர், கொள்கைகள், தொடங்கப்படும் தினம், மாநாடு என எல்லாவற்றையும் ரஜினிதான் வெளிப்படுத்த வேண்டுமே தவிர அவர் சார்பில் மற்றொருவர் வெளிப்படுத்த எந்தவிதமான உரிமையும் கிடையாது. நான் அவரின் செய்தித்தொடர்பாளர் நான் இல்லை. அவர் தொடங்க இருக்கிற கட்சிக்காரனும் நான் இல்லை என்று கூறி எஸ்கேப் ஆனார்.

“பொது வாழ்வை விட்டுப் போகிறேன்…” என அறிவித்த தமிழருவி மணியனின் அரசியல் தடுமாற்றம்……

ஆனால், கடந்த 17ந்தேதி திருப்பூர் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, காமராஜரின்  9 ஆண்டுகள் ஆட்சியை நேரில் பார்த்தவன் என்பதால், தற்போதைய சூழலில்  ரஜினியை ஆதரிக்க முன்வந்தேன்…   இயன்றவரை அவரை முதல்வராக்க எனது அறிவை, ஆற்றலை பயன்படுத்துகிறேன்… இதை  அனைவரும் யோசிக்க வேண்டும்… ஆட்சி நாற்காலியில் அமர வேண்டியவர் துறவி போல் இருக்க வேண்டும். பொது சொத்தில் கை வைக்காதவராக இருக்க வேண்டும். அதற்கு ரஜினி முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என்பது எனது ஆசை என்ற பரபரப்பாக பேசினார்….

அதில், சசிகலா, ஓபிஎஸ், ஸ்டாலின், ராமதாஸ் குறித்து பேசியவர்…. ரஜினிகாந்த் குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார்….

ரஜினி குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழருவி மணியன் கழுவி  ஊற்றும்  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது….