கொடூர அமைதி!: கமல், ரஜினியை தாக்கும் தமிழிசை!

டிகர் சசிக்குமாரின் உறவினரும் அவரது ‘கம்பெனி ப்ரொடக்ஷன்’  நிறுவனத்தின் மேனேஜருமான அசோக்குமார் என்பவரின் தற்கொலை, திரைத்துறையைக் கடந்து தமிழகம் முழுதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

“ஒவ்வொரு அமைப்பிலும் ஒரு மரணம் நிகழும்போது அங்கே புரட்சி உண்டாகும். தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் புரட்சி வெடித்திருக்கிறது”  என்று நடிகரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் ஆவேசமாக தெரிவித்திருக்கிறார். மேலும் பல திரையுலகப் பிரமுகர்களும் தங்கள் ஆதங்கத்தை, வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர்.

ஆனால் சூப்ப6 தங்கள் அரசியல் ஆசையை வெளிப்படுத்தி உள்ள சூப்பர் ஸ்டாரான ரஜினியும்,  உலகநாயகன் கமலும் இதுவரை கருத்து  தெரிவிக்கவில்லை.

இதனால், இவர்கள் இருவரும் எப்போது எப்போது வாய்திறப்பார்கள் என்று பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதனிடையே தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தன்துறை சார்ந்த துக்கம் தன்னைஏற்றிவிட்டதுறையில் பெரும்துயரம்…  பகிர்ந்து கொள்ளா கொடூரஅமைதி… திடீர் டுவிட்டர்அரசியல்வாதிகள் எங்கே?  தேடத்தான்வேண்டும்!” என்று பதிவிட்டிருக்கிறார்.

கமல் அளவுக்கு இல்லை என்றாலும் ரஜினியும் அவ்வப்போது ட்விட்டுபவர்தான். ஆகவே இருவரையும்தான் தமிழிசை சொல்கிறார் என்றும்.. இல்லை இல்லை, கமலை மட்டும்தான் தமிழிசை குறிப்பிடுகிறார் என்றும் இருவிதங்களாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

தமிழிசையின் இந்த ட்வீட்டைப் பார்த்த நெட்டிசன்கள், “இவர் கமலை மறைமுகமாக அல்லாமல் நேரடியாகவே விமர்சிக்கிறார்”, “இப்போ உங்களோட ட்வீட்டை படிக்குறதுக்கு கோனார் உரை தேவைப்படுது மேடம்”, “கமலுக்குப் போட்டியா ட்வீட் போடுறாராம்”, “மருந்து சீட்டு எழுதுற மாதிரி சேர்த்தே எழுதாதீங்க முடியல” என்றும் பலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

எப்படியோ தமிழிசையின் இந்த ட்வீட்க்கு கமல் மௌனமாக இருப்பாரா? இல்லை பதிலுக்கு அவரும் ஒரு ட்வீட்டைத் தட்டிவிடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கந்துவட்டி என்று சொல்ல முடியாது. அவசரத்துக்கு பேங்க்.. நாற்பது ஐம்பது வருடங்களாக அப்படித்தான். எவ்வளவு.. வட்டி என்பதெல்லாம் பஸ்பரம் .. வீட வாசலை அடகு வச்சு கடன் கிடையாது.

ஜெயலலிதா இறந்த டிசம்பர் 5ம் தேதி இறந்திருந்தால் தோஷம் ஆகும். ஏனென்றால் அன்று கனிஷ்டா பஞ்சமி.  32 இதற்குப் பரிகாரம்.. பிராமணர்கள் லட்சம் முறை  ஆகும். அதனால் தோஷம்