மணலி ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை பங்கேற்பு

மணலியில் உள்ள ஸ்ரீ சிவ விஷ்ணு ஜோதி ஐயப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார்.

 சென்னையை அடுத்த மணலியில் உள்ள ஸ்ரீ சிவ விஷ்ணு ஜோதி ஐயப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா, தந்திரி அண்டலாடி பரமேஸ்வரன் நம்பூதிரி தலைமையில் கடந்த 6ம் தேதி நடந்தது. அன்று மாலை நாதஸ்வர மங்கள இசை நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து 7ம் தேதி பல்வேறு சிறப்பு பூஜைகள், பக்தி தெம்மாங்கு இசை நிகழ்ச்சிகள் நடந்தன. கும்பாபிஷேக விழாவையொட்டி, கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார்.

முன்னதாக கோயிலுக்கு வந்த அவருக்கு விழாக் குழுவினர் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். அங்கு ஐயப்ப சுவாமியை தமிழிசை வழிபாடு செய்தார்.