ஓட்டு விற்பனை வெற்றிகரமாக நடந்திருக்கிறது!: தமிழிசை

சென்னை :

ர்கே நகரில் முதல் சுற்று வாக்கு எண்ணப்பட்டு டி.டி.வி. தினகரன் முன்னிலை பெற்றிருக்கும் நிலையில், “ஓட்டு விற்பனை வெற்றிகரமாக நடந்திருக்கிறது” என்று கருத்து தெரிவித்தருக்கிறார் பாஜக தமிழக தலைவர் தமிழிசை.

ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரம் துவங்கிய நிலையிலேயே, தொகுதிக்குள் பணப்பட்டுவாடா நடப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டு எழுந்தது.

ஆளும் அ.தி.மு.க. தரப்பில் வாக்குக்கு தலா 6 ஆயிரம் அளிக்கப்பட்டதாகவும், சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் தரப்பில் வாக்குக்கு தலா 12 ஆயிரம் தருவதாக உறுதி கூறப்பட்டு டோக்கனாக இருபது ரூபாய் தாள் அளிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.  திமுக வேட்பாளர் சார்பில் தலா 3 ஆயிரம் ரூபாய் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்து சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் முன்னிலை வகிக்கிறார்.

இந்த நிலையில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆர்கேநகர் முதல் சுற்று முடிவுகள் ஓட்டு விற்பனை வெற்றிகரமாக நடந்திருப்பதை காட்டுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.