தமிழிசை சவுந்தர ராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமனம்

டில்லி

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த முதுபெரும் அரசியல்வாதியான குமரி அனந்தனின் மகள் தமிழிசை. மருத்துவரான இவர் கணவர் சவுந்தரராஜனும் ஒரு மருத்துவர் ஆவார். இவர் தற்போது தமிழக பாஜக தலைவராகப் பதவியில் உள்ளார்.

தற்போது இவர் தெலுங்கானா மாநில  ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளார். தற்போது ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு ஆளுநராக ஈ எஸ் எல் நரசிம்மன் பதவியில் உள்ளார்.

கடந்த 1961அம் வருடம் ஜூன் மாதம் 2 ஆம் தேதி பிறந்த தமிழிசை சவுந்தரராஜன் பாஜகவின் தேசிய செயலராகவும் பதவி வகித்துள்ளார். இவருக்கு சுகந்தன் என ஒரு மகனும் பூவினி என்னும் ஒரு மகளும் உள்ளனர்.