10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் அறிவிப்பு.

13118929_10153819866618303_2704526854906542195_nதமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே மாதம் 16ஆம் தேதிக்கு அடுத்த நாள் மே 17ஆம் தேதி பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது. அதே போன்று மே மாதம் 25ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பனிரெண்டாம் வகுப்பு பொது நுழைவுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 1ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 6,550 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் எழுதினர்.

 

இதே போல், 10ம் வகுப்பு பொது தேர்வு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச் 15-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

 

பிளஸ் 2 தேர்வு முடிவு மே 17-ம் தேதி காலை 10.31 மணி முதல் 11 மணிக்குள் வெளியாகும். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவு மே 25-ம் தேதி காலை 9.31 மணி முதல் 10.00 மணிக்குள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரியில் அறியலாம்.

 

Leave a Reply

Your email address will not be published.