+ 2 தமிழ், ஆங்கிலத்தில் யாரும் சென்ட்டம் இல்லை: ஏன் தெரியுமா?

சென்னை:

மிழகம், புதுச்சேரியில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.  9 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் பாடங்களில்  எந்த மாணவரும் சென்ட்டம் ( 200க்கு 200 மதிப்பெண்கள்) எடுக்கவில்லை.

கடந்த வருடங்களில் 100க்கு, 100 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர், தமிழில் பிழையின்றி எழுத சிரமப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மொழிப் பாடத்தில், ‘சென்ட்டம்’ மதிப்பெண் வழங்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. .
இந்த ஆண்டு, சென்ட்டம் மதிப்பெண் வழங்குவதையே, தேர்வுத்துறை ரத்து செய்தது.  அதாவது, விடைத்தாளில், இறுதி மதிப்பெண் வழங்கும் முகப்புபக்க சீட்டில், 100 மதிப்பெண் இடுவதற்கான கட்டம் மாற்றப்பட்டு, 99 என்ற இரண்டு இலக்கம் எழுதும் வகையில், அமைக்கப்பட்டது.

பத்தாம் வகுப்பிலும் இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலத்திற்கு, சென்ட்டம் மதிப்பெண்  அளிக்கப்படாது என்று தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.