தமிழகத்தில் காலியாக உள்ள 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது? தலைமை தேர்தல் ஆணையர்

டில்லி:

தமிழகத்தில்  காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று  தலைமை  தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறி உள்ளார்.

மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தல் தேதி மற்றும் சமீபத்தில் கலைக்கப்பட்ட தெலுங்கான மாநிலத்திற்கு தேர்தல் தேதிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையர்  ஓ.பி.ராவத் இன்று அறிவித்தார்.

அப்போது தமிழகடத்தில் காலியாக உள்ள 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறி உள்ளார்.

தமிழகத்தில் தற்போது, நிலவி வரும் மழை காரணமாக தேர்தல் தேதி குறித்து தற்போது அறிவிக்க வேண்டாம் என தமிழக தலைமை செயலாளர் கடிதம் எழுதி உள்ளதார், தமிழக இடைத்தேர்தல் குறித்து  பின்னர் அறிவிக்கப்படுவதாக கூறி உள்ளார்.