தமிழகத்தில் பலியானோரின் எண்ணிக்கை 3144 ஆக உயர்வு…! இன்று மட்டும் 74 பேர் பலி

--

சென்னை: தமிழகத்தில் விடுபட்ட பலி எண்ணிக்கையான 444யும் சேர்த்தால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,144 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 5,849 பேருக்கு கொரோனா உறுதி ஆனது.

இதன்மூலம் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,181 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 89,561 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் 1 முதல் ஜூன் 10 உயிரிழந்தோரின் விடுபட்ட எண்ணிக்கை 444 என கொரோனா அறிக்கையில் சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் தொடர்ந்து 22ம் நாளாக பலி எண்ணிக்கை 60ஐ கடந்துள்ளது. இன்று ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்ததால், அந்த எண்ணிக்கை மற்றும் விடுபட்ட எண்ணிக்கை சேர்த்தால் 3,144 ஆக உயர்ந்துள்ளது.