தமிழகம்: 50 சதவீதம் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு! தலைமை நீதிபதி

சென்னை:

மிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் 50 சதவீதம் ஆக்கிரமிக்கப்பட்டு  உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் கூறினார்.

சென்னை தரமணி அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் 2 நாள் சுற்றுச்சூழல் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற இறுதிநாள் கருத்தரங்கத்தில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

kavul

சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிகளவு விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

தற்போது தமிழகத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. அதாவது 50 சதவீதம் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் உள்ளது.

இதை அகற்ற வேண்டும். இயற்கையை நாம் பாதுகாக்க வேண்டும். கோயில்களில் குளங்களை அமைத்து  நம் முன்னோர் நீரை சேமித்தனர். தற்போது அந்த நடைமுறை மாறி வருகிறது.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை நீதிமன்றம் தடுத்தால் மட்டும் போதாது. நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்த விழிப்புணர்வை அடுத்த தலைமுறையினரும் தெரிந்து கொள்ளும் வகையில் நமது நடவடிக்கை இருக்க வேண்டும்.

அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தண்ணீர் சேமிப்பு  குறைகிறது. தண்ணீருக்காக 3வது உலகப் போர் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நம் முன்னோர்  சாலை ஓரங்களில் மரம் நட வேண்டும் என்று வலியுறுத்தினர். அதன்படி மரங்கள் நடப்பட்டன. ஆனால், இன்று சாலைகளை அகலப்படுத்துகிறோம் என்ற பெயரில் மரங்களை வெட்டுகின்றனர்.

விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி  விற்பனை செய்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

கார்ட்டூன் கேலரி