தமிழகம் தத்தளிப்பு: மு.க.ஸ்டாலின் திடீர் துபாய் பயணம்!

சென்னை:

மிழகம் முழவதும் வடகிழக்கு பருவமழை காரணமாக தத்தளித்து வருகிறது. இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் திடீரென துபாய்க்கு பயமானார்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக சென்னை உள்பட பல்வேறு பகுதிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வடசென்னை பகுதிகளுக்கு மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்தார்.  ஓட்டேரி கால்வாய் பகுதிகளையும் பார்வையிட்டார். மழை நீரை வடிய வைக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

மேலும், மழை காரணமாக மின்சார வயரில் சிக்கி உயிரிழந்த 2 சிறுமிகளின் இறுதி சடங்கிலும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில் இன்று  9.45 மணிக்கு  விமானம் மூலம் தனது மனைவி துர்காவுடன் மு.க.ஸ்டாலின் சார்ஜா புறப்பட்டுச் சென்றார்.

மு.க.ஸ்டாலின் பயணம் குறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

ஐக்கிய அரபு எமரேட்சில் உள்ள சார்ஜாவில் ஆண்டு தோறும் 11 நாட்கள் சர்வதேச புத்தக திருவிழா நடைபெறு வது வழக்கம். உலகின் பல நாடுகளில் இருந்து சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்படுவார்கள்.

இந்தியாவில் இருந்து ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். இந்த ஆண்டு புத்தக திருவிழாவில் பங்கேற்க கழகச் செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமாள மு.க.ஸ்டாலினை சார்ஜா அரசு நிர்வாகம் சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளது.

புத்தக திருவிழாவில் பங்கேற்பதுடன், சர்வதேச புத்தக வாசிப்பாளர்களின் பயன்பாட்டுக்கு தனக்கு அன்பளிப்பாக வந்த 1000 தமிழ் புத்தகங்களை சார்ஜா புத்தக ஆணையத்திற்கு வழங்குவதற்காக இன்று (3-ந்தேதி) சார்ஜாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகமே தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருக்கும்போது, இங்கிருந்து, நிவாரண  பணிகளை விரைந்து மேற்கொள்ளும் வகையில் அரசை  தார்க்கம்பாக குத்திக்கொண்டிருப்பதை தவிர்த்து, வெளிநாட்டு பயணம் மேற்கொண்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது