அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை மேலும் மோசமடைந்தது! காவேரி மருத்துவமனை தகவல்…

சென்னை: அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து உயிர்காக்கும் கருவிகளால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்து உடல்நிலை மேலும் மோசமடைந்து உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு உள்ளது.

மூச்சுத்திணறல் காரணமாக முன்னதாக தமிழக வேளாண்துறைஅமைச்சர் அமைச்சர் துரைக்கண்ணு  கடந்த 13ஆம்தேதி  விழுப்புரத்தில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற நிலையில், மேல்சிகிச்சைக்காக  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு கொரோனா தொற்றும் உறுதியாகி  இருப்பதுடன், அவரது  நுரையீரல் 90 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து,   எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்,உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து,  முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் என பலரும் நேரில் சென்று மருத்துவர்களிடம் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.

இந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் செயல்படுவதில் சவாலாக  இருப்பதாகவும், செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவி உதவியுடன் மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அவரது  உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதுமில்லை என்றும், உடல்நிலை மேலும் மோசமடைந்து இருப்பதாகவும், முக்கிய உறுப்புகள் செயலிழந்து வருவதாகவும்  காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.