சென்னை: சுற்றுச்சூழல் தாக்க வரைவு குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை 2020க்கு நாடு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன. சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் இந்த அறிவிக்கையை  எதிர்க்கின்றனர்.

இந் நிலையில், சுற்றுச்சூழல் தாக்க வரைவு குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ள்து. வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் 12 பேர் இந்த குழுவில் உள்ளனர்.

மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர், பொதுப்பணித்துறை தலைமை செயலாளர் உள்ளிட்டோர் குழுவில் இடம்பிடித்து இருக்கின்றனர்.