ஜனவரி 8ல் தமிழக சட்டசபை கூட்டம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை,

மிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சட்டசபை கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஜனவரி) 8ந்தேதி கூடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக சட்டப்பேரவை செயலாளர் பூபதி இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

அதிமுகவின் இரு அணிகளும் இணைப்பு, ஆர்.கே.நகரில் டிடிவி வெற்றி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு போன்ற பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அடுத்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் வரும் 8ந்தேதி தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

2018ம் ஆண்டு தொடங்க உள்ள முதல் கூட்டத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது முதல் உரையை நிகழ்த்த இருக்கிறார்.

முதன்முதலாக சபைக்கு வரும் அவரை,   சபாநாயகர், அவை முன்னவர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் சம்பிரதாயப்படி சபைக்கு  வரவேற்று அழைத்து வருவார்கள். அதைத் தொடர்ந்து கவர்ன உரை நிகழ்த்துவார்.

தொடர்ந்து, கவர்னரின் உரையின் தமிழ் மொழி பெயர்ப்பை சபாநாயகர் வாசிப்பார். அத்துடன் அன்றைய கூட்டம் முடிவடையும். பின்னர் மறுநாள் முதல் கவர்னர் உரை குறித்து விவாதம் தொடங்கும்.

இந்த கூட்டத்தொடரின்போது, கவர்னரின் ஆய்வு, எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம், ஆர்.கே.நகர் தேர்தல் போன்றவை குறித்து அனல்பறக்கும் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

மேலும், அரசை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்ற டிடிவி தினகரன் எம்எல்ஏவாக கலந்துகொள்ள இருப்பதால் சட்டசபை கூட்டம் மேலும் சூடு பறக்கும் என நம்பப்படுகிறது.

You may have missed