தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்றுடன் முடிகிறது!

சென்னை:

மிழக சட்டப்பேரவை மானிய  கூட்டத் தொடர் இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது. அதன் காரணமாக இன்று சட்டப்பேரவையில்  கேள்வி நேரம்  கிடையாது.

தமிழக சட்டப்பேரவை கடந்த மாத்ம் ( ஜூன்)  14-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 24 நாட்களாக நடைபெற்று வரும் இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்றுடன் ( புதன்கிழமை) நிறைவடைகிறது.

இதையடுத்து கேள்வி நேரம் நடைபெறாத வகையில் நேற்று அவை முன்னவர், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தீர்மானம் கொண்டு வந்தார். அதையடுத்து குரல் ஓட்டு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நடைபெறும் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று, பொதுத்துறை, மாநில சட்டப்பேரவை, ஆளுநர்- அமைச்சரவை, நிதித்துறை, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்த்திருத்தத் துறை, திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறை ஆகிய துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகள் விவாதங்களுக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

இவற்றுக்கு நிதியமைச்சர் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட  இருக்கிறார்.