சென்னை:

மிழக பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. காலை 10.30 மணி முதல் தமிழக பட்ஜெட்டை துணை முதல்வர் ஓபிஎஸ் தாக்கல் செய்தார்.

அதைத்தொடர்ந்து  சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட முடிவின்படி, இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடத்தப்பட இருப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

காவிரி நதி நீர் பிரச்சினையில் உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி, 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளாததை கண்டித்தும், உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் இன்று மாலை சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடத்தப்படும் என கூறப்படுகிறது.

இன்று பிற்பகல் சட்டமன்ற சிறப்பு கூட்டம்  மாலை 3.30 மணிக்கு கூட்டம்  தொடங்குவதாக சபாநாயகர் கூறி உள்ளர். இந்த கூட்டத்தில்,  காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வலியுறுத்தி ஒரு மனதாக  தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது.