சென்னை:
தமிழக சட்டசபையில்  பேச அனுமதி தராவிட்டால் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவேன் என்று விஜயதரணி கூறினார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட்மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

அமைச்சர் சண்முகம் பேசிகொண்டிருக்கும்போது இடையில் குறுக்கிட்டு பேச விஜயதரணி முயன்றார். சபாநாயகர் அமர சொல்லியும் அவர் அமராமல் பேசிக்கொண்டு இருந்தார். இதனால்  கோபமடைந்த சபாநாயகர், எந்த உறுப்பினர் பேசுவார் என உங்கள் கட்சித் தலைவர் முடிவெடுத்து என்னிடம் பட்டியல் தருவார், அதன் அடிப்படையில் தான் வாய்ப்பு தரப்படுகிறது என்றார்.
இதையடுத்தது காங்கிரஸ் சட்டசபை தலைவர் கே.ஆர்.ராமசாமி சொல்லியும், தொடர்ந்து விஜயதரணி பேசிக்கொண்டு இருந்தார்.
பெண் உறுப்பினர் சபையில் இப்படி நடப்பது நியாயமா? உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் பெண் உறுப்பினர் என்றும் பார்க்க மாட்டேன் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்தார்.
இந்நிலையில் தமிழக சட்டசபையில் தொடர்ந்து தனக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாக விஜயதரணி புகார் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தலைவர் தனபால் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாக குற்றம் சாட்டிய அவர், சட்டப்பேரவையில் பேச வாய்ப்பளிக்காவிட்டால் பேரவையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவேன் என கூறியுள்ளார்.