தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம்: கங்கைகொண்ட சோழபுரம் கோயில் குடமுழுக்கு!

தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம்: கங்கைகொண்ட சோழபுரம் கோயில் குடமுழுக்கு இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து குடமுழுக்கை கண்டு களித்து சிவனின் ஆசிர்வாதம் பெற்று சென்றனர்.

அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோயிலை ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் கட்டியதாக வரலாறு.

கங்கையையும், கடாரத்தையும் வெற்றிக்கொண்ட ராஜேந்திர சோழன் அந்த கருவூலத்தில் இருந்து கொண்டு வந்தப் பொருட்களை கங்கை கொண்ட சோழபுரத்தில் வைத்ததாக கூறப்படுவதுண்டு.

இங்குள்ள நந்தி மீது தினமும் சூரிய ஒளி பட்டுச் சிதறி அந்த ஒளிக்கதிர்கள் கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலித்து பிரகாசிப்பது மிகவும் இக்கோயிலின் சிறப்பு என கூறப்படுகிறது.
இந்தக்கோவிலில் ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் வெகு அழகாக நவகிரகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே மிகவும் பெரிய அளவிலான லிங்கம் இருப்பது இங்கு தான்.

இங்குள்ள லிங்கம் 13.5 அடி உயரம். 60 அடி சுற்றளவும் கொண்டது. இந்த லிங்கம் ஒரே கல்லால் ஆனது மிகவும் சிறப்பு. இங்கு உள்ள நந்தியும் மிகவும் பெரிய அளவு கொண்டது .இது முழுக்க சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டது.

நந்தி லிங்கத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது. தினமும் சூரிய ஒளி இந்த நந்தி மீது பட்டுச் சிதறி அந்த ஒளிக்கதிர்கள் கருவறையில் உள்ள லிங்கத்தின் மீதும் பட்டு பிரதிபலித்து பிரகாசிப்பது மிகவும் அற்புதமான காட்சி என கூறப்படுகிறது.

லிங்கத்திற்கு பின்னரே கோபுரம் இங்கும் தஞ்சாவூரை போன்று லிங்கம் பிரதிஷ்டை செய்த பின்னரே கோபுரம் கட்டப்பட்டுள்ளது. தஞ்சைக்கு அடுத்து இந்த கோபுரம் தான் தமிழகத்தில் பெரியது.