சென்னை;

மிழக அரசின் பட்ஜெட் கூட்டம் இன்று தொடங்கியது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

காலையில் சரியாக 10.30 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கிய நிலையில், துணை முதல்வர் ஓபிஎஸ் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார்.

சுமார் இரண்டரை மணி நேரம் (157 நிமிடம்) தொடர்ந்து பட்ஜெட் உரையை வாசித்த ஓபிஎஸ், மதியம் 1.07 மணிக்கு உரையை வாசித்து முடித்தார்.  தமிழக துணை முதல்வர்  ஓபிஎஸ் தாக்கல் செய்யும்   8-வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அதைத்தொடர்ந்து, சபாநாயகர், அத்திக்கடவு அவிநாசி திட்ட அறிவிப்புக்கு நன்றி தெரிவித்தது பேசினார். அதைத்தொடர்ந்த கூட்டம் முடிவடைந்தது.

சட்டசபை கூட்டம் தொடங்கியதும், பட்ஜெட் உரையை புறக்கணிப்பதாக கூறி  திமுக எம்எல்எக்கள் ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

இன்றைய பட்ஜெட்டின்போது தெரிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்…

தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி,

பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி 

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 9% ஆக உயரும் 

நடப்பாண்டில் ரூ.1,43,962 கோடி கடன் வாங்க முடிவு