தமிழக பட்ஜெட்2019-20: நிதிப்பற்றாக்குறை ரூ.44.176 கோடி! ஓபிஎஸ்

சென்னை:

மிழக அரசின், 2019- 2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக சட்டசபையில் இன்று காலை 10 மணிக்கு நிதி அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

அமைதி, வளம், வளர்ச்சி என்ற முழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது

பொருளாதார வளர்ச்சியின் பயனை ஏழை, எளிய மக்களும் நுகர அரசு வழிவகை செய்து வருகிறது

உற்பத்தி, சேவை துறைகளில் கூடுதல் முதலீடுகளை ஈர்க்க அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது

தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை 44.176 கோடி.

பட்ஜெட்டில் தகவல் செலவீனங்கள், 20,86,17 கோடியாக இருக்கும் என கணக்கீடு வரும்

நிதியாண்டில் தமிழக கடன் அளவு 3.97 லட்சம் கோடியாக இருக்கும்

தமிழகத்தின் வளர்ச்சி வரும் நிதியாண்டில் 8.16 சதவீதமாக இருக்கும்

தமிழகம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளது

கல்வி, பாலின சமத்துவம் உள்ளிட்ட குறியீடுகளில் தனிக்கவனம்

மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது

இந்த நிதியத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு