எடப்பாடி தலைமையில் நாளை அமைச்சரவையின் முதல் கூட்டம்!

--

சென்னை,

மிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறுகிறது. நாளை மாலை 4.30 மணிக்கு  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்ற பிறகு நடைபெற இருக்கும் முதல் கூட்டம் இது.

இந்த கூட்டத்தில் விரைவில் தொடங்க இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் பற்றி விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

மேலும், தற்போது நெடுவாசலில் நடைபெற்று வரும் பொதுமக்கள் போராட்டம் குறித்தும், நீட் தேர்வு குறித்தும், ரேஷனில் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அல்லாடி வருவது பற்றியும் விவாதிக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும், அதிமுகவின் தற்போதைய நிலையில், மக்களின் எதிர்ப்பை சமாளிப்பது குறித்தும், மக்களை குளிர்விக்கும் வகையில் பட்ஜெட்டில் என்னென்ன சலுகைகள் அறிவிக்கலாம் என்பது குறித்தும் விவாதிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.