பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்!

சென்னை,

மிழகத்தில் தற்போதுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று பிற்பகல் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

அதிமுக அம்மா அணியில் ஏற்பட்டுள்ள பிளவை தொடர்ந்து, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்க ளுக்கு எதிராக டிடிவி தினகரன் அதிமுக எம்எல்ஏக்களை வளைத்து வருகிறார்.

இதன் காரணமாக ஆட்சி நீடிக்குமா அல்லது கவிழுமா என்பது கேள்விக்குறியாகி உள்ள நிலையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டத்துக்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று (08-06-17) பிற்பகல்  3:00 மணிக்கு தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில், வரும் 14ந்தேதி தொடங்க இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்தும், அதில் நடைபெற இருக்கும்  துறை வாரியாக, மானிய கோரிக்கை மீது விவாதம்  மற்றும் அதற்கு துறை அமைச்சர்கள் பதில் அளிப்பதுடன், துறையில் புதிதாக செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பதுபோல  110 விதியின் கீழ் புதிய  அறிவிப்புகளை  வெளியிடுவது குறித்தும், எதிர்க்கட்சிகளை சமாளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.