தமிழக அமைச்சரவை கூட்டம் (பைல் படம்)

சென்னை:

மிழக அமைச்சரவை கூட்டமானது நாளை மறுநாள் (வியாழன்) மதியம் மூன்று மணி அளவில், முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதிமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி, பிரதமர் மோடியை சந்தித்து ஆசி பெற இன்று மாலை டில்லி செல்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

நாளை பிரதரை சந்திக்கும் எடப்பாடி நாளை இரவு அல்லது நாளை மறுநாள் காலை சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து மாலை 3 மணி அளவில் தமிழக அமைச்சரவை கூட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

அதிமுவில் ஏற்பட்ட பிளவை தொடர்ந்து எடப்பாடி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் எடப்பாடிக்கு எதிராக அமைச்சர்கள் ஒரு பிரிவினரும், எம்எல்ஏக்கள் ஒரு பிரிவினரும் தனித்தனியாக லாபி செய்து வருகின்றனர்.

நேற்றும், இன்றும் கோட்டையில் முதல்வர் எடப்பாடியை அதிமுக எம்எல்ஏக்கள் அணி அணியாகவும், அமைச்சர்கள் சிலர் ஒரு அணியாகவும் சந்தித்து பேசி வருகின்றனர். இது கோட்டை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் நாளை மறுதினம் நடைபெற இருக்கும் தமிழக அமைச்சரவையில், அமைச்சரவை மாற்றம் குறித்து ஏதேனும் முடிவு எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

மேலும், தமிழக சட்டசபையை கூட்டினால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்
றும், சட்டசபையை கூட்டடி மானிய கோரிக்கைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்  கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அதுகுறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில்தான் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது