மானிய கோரிக்கைகள் குறித்து ஆலோசனை: 24ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

சென்னை:

மிழக சட்டமன்ற கூட்டம் வரும் 28ந்தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள  நிலையில், கூட்டத்தில் நடைபெற உள்ள மானிய கோரிக்கை விவாதங்கள் குறித்து விவாதிக்க  ஜூன் 24ம் தேதி (திங்கள் கிழமை) தமிழக அமைச்சரவை கூட்டம்  நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

(iபைல் படம்)

தமிழக பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மானிய கோரிக்கைகள் குறித்து விவாதங்கள் நடைபெறாத நிலையில், லோக்சபா தேர்தல் காரணமாக  கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், அனைத்து தேர்தல்களும் முடிவடைந்துள்ள நிலையில்,  மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடத்த வரும் 28 ஆம தேதி சட்டப்பேரவை கூவிடவிருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

சட்டமன்ற மரபுப்படி 25 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும். ஆனால் எத்தனை நாட்கள் கூட்டம் நடைபெறும் என்பது சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும்.

ஏற்கனவே தமிழக  சபாநாயகருக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் அளித்துள்ள நிலையிலும், தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சினை போன்ற காரணங்களால்,  தமிழக சட்டப்பேரவை கூட்டம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வரும் திங்களன்று (ஜூன் 24) காலை 11 மணி அளவில் முதல்வர் எடப்பாடி தலைமையில் அமைச்சரவை கூட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..