Random image

தமிழக அமைச்சரவை 9ம் தேதி கூடுகிறது

சென்னை:

தமிழக அமைச்சரவை கூட்டம் 9ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் விடுதலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு உடனே முடிவெடுக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கேட்டுக் கொண்டன. இந்நிலையில் நாளை மறுநாள் (9ம் தேதி) முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 7 பேரின் விடுதலை குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.