சென்னை:
தேசிய புலனாய்வு அமைப்பினர், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஆறு பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்களில் கடையநல்லூரில் கைது செய்யப்பட்ட சுப்ஹானி ஹாஜா மொய்தீன் என்பவரும் ஒருவர். இவரை விசாரித்தபோது, எப்படி ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டது என்பதை விவரித்ததாக தகவல் தகவல் உள்ளது.  மேலும்,தமிழகத்தில் இவரைப்போல பலர் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

சுப்ஹானி ஹாஜா மொய்தீன்
சுப்ஹானி ஹாஜா மொய்தீன்

அவரது வாக்குமூலம் இதோ:
“எனது சொந்த ஊர், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த தொடுப்புழா.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி ஈராக் சென்று ஐஎஸ் அமைப்புடன் இணைந்தேன். எனது குடும்பத்தாரிடம் மெக்கா புனித பயணம் (உம்ரா) செல்வதாக சொல்லி கிளம்பிச் சென்றேன்.
ஆரம்பத்தில் ஐ.எஸ். இயக்கத்தைப் பற்றி கேள்விப்பட்டபோது, இஸ்லாமியர்களுக்கான இயக்கம் என்ற எண்ணம்தான் ஏற்பட்டது. பிறகு ஆர்வம் அதிகரித்தது. இணையதளம் மூலம் அந்த அமைப்பினரை தொடர்புகொண்டேன். என்னைப் பற்றி விசாரித்து, தங்கள் இயக்கத்தில் சேர்த்துக்கொண்டார்கள்.
சென்னையில் இருந்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல் சென்றேன். அங்கே என்னைப்போலவே ஐ.எஸ். இயக்கத்தில் சேர பாகிஸ்தான் மற்றும் ஆப்கன் நாட்டை சேர்ந்த சிலர் காத்திருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து எல்லையை கடந்து ஈரானிலுள்ள மொசூல் நகரை அடைந்தோம்.   இது ஐஎஸ் ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும்.
b
அங்கு ஷரியா முறைப்படி போர்பயிற்சி அளித்தார்கள்.   அங்கு முழுமையான போர்ப்பயிற்சி மற்றும் ஆயுதங்களை கையாள்வது பற்றி கற்றுக்கொடுத்தார்கள். பிறகு மொசுல் பகுதியில் உள்ள போர்முனை பகுதியில் பாதுகாப்பு பணி செய்ய அனுப்பப்பட்டேன்.  இரண்டு வார காலம் அங்கு பணியில் இருந்தேன். உணவு, தங்கும் செலவு போக  மாதம் 100 டாலர் சம்பளமாக கொடுத்தார்கள்.
ஆனால் ஐ.எஸ். அமைப்பினரின் போர்குற்ற கொடுமைகளை காண சகிக்கவில்லை. மேலும் எனது நண்பர்கள் இருவர், குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்ததும் என்னை கடுமையாக பாதித்தது.
ஆகவே அமைப்பில் இருந்து விலகுவதாகதெரிவித்தேன். ஆகவே என்னை சிறையில் அடைத்து கடுமையாக சித்திரவதை செய்தார்கள். சிறையில் என்னுடன் வேறு நாடுகளைச் சேர்ந்த சிலரும் இருந்தார்கள். அனைவரையும் ஐ.எஸ். அமைப்பின் நீதிபதி முன் நிறுத்தினார்கள். அங்கு எங்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டது.
ஆனாலும் நான் தொடர்ந்து வலியுறுத்தியதால் எங்களை திரும்பிச் செல்ல அனுமதித்தார்கள். இதையடுத்து மீண்டும் எல்லையை கடந்து துருக்கிக்குள் வந்தோம்.
அங்கிருந்த போலீசாரிடம்,  வேலை தேடி வந்து சிக்கிகொண்டதாக கூறினேன். அவர்கள் என் வீட்டுக்கு தகவல் தெரிவித்னர். இதையடுத்து என் வீட்டில் இருந்து  பணம் அனுப்பினார்கள். இதை வைத்து கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி சென்னை திரும்பினேன். பிறகு சொந்த ஊர் சென்றேன்.
images
அதன் பின்னர் மனம் திருந்தி ஒரு நகைக்கடையில் வேலைக்கு சேர்ந்தேன்.  ஆனால் சில நாட்களிலேயே ஐ.எஸ். அமைப்பினருடன் இணையதளம் மூலம்தொடர்பு ஏற்படுத்திக்கொண்டேன்.  சிவகாசியிலிருந்து வெடி குண்டு  தயாரிக்க பயன்படும் பொருட்களை சேகரித்து அனுப்பும்படி உத்தரவிட்டனர். அதற்கான பணியில் ஈடுபட்டிருந்தேன்.  .
என்னைப்போலவே ஐ.எஸ். அமைப்புக்கு விசுவாசமான ஆட்கள் சென்னை, கோவை மற்றும் பிற தமிழக நகரங்களிலும் இருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து சில பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன்” என்று சுபானி தெரிவித்திருக்கிறார்.
அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பிறகு சிறையில் அடைத்தனர்.