‘நீட்’டுக்கு எதிராக கொந்தளிக்கும் தமிழகம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

சிதம்பரம்,

நீட்டுக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் மீண்டும் சூடுபிடித்துள்ளது. மாணவி அனிதாவின் தற்கொலை காரணமாக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மத்திய மாநில அரசுகளின் வஞ்சகத்தால் தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு தடுக்கப்பட்டது. இதன் காரணமாக 1176 மதிப்பெண் பெற்ற அரியலூர் மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த நிகழ்வு காரணமாக தமிழகத்தில் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், சிதம்பரத்தில் உள்ள  அண்ணாமலை பல்கலைகழக மாணவர்கள்.  அனிதாவின் மரணத்திற்க்கு நீதிக்கேட்டும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுருத்தியும் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

இதன் காரணமாக அவர்கள் கல்லூரிக்குள் செல்லாமல் நுழைவு வாயிலேயே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுபோல தமிழகம் முழுவதும் அனைத்துகல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

 

You may have missed