சென்னை:

யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இயந்திரத்துடன் கூடிய மாதிரி வாக்குப்பதிவை தமிழக  தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தொடங்கி வைத்தார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர்கள்  யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் ஒப்புகைச்சீட்டு வழங்கும் விவிபாட் இயந்திரத்தின் செயல் விளக்க நிகழ்ச்சியை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சென்னை ஷெனாய் நகர் மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள சுந்தரவனம் பள்ளியில் மாதிரி வாக்குப் பதிவு நடத்தி அந்த இயந்திரம் செயல்படுவது குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது, வாக்களித்தவுடன், ஒப்புகை சீட்டு இயந்திரத்தில், யாருக்கு வாக்களிக்கப்பட்டது என அச்சிடப்பட்ட தகவல் சுமார் 7 வினாடிகள் மட்டுமே தெரியும் என்று செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது.

அப்போது சிலர் ஒப்புகை சீட்டு தங்களுக்கு தரப்படுமா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அதிகாரிகள், வாக்களித்ததை காட்டும் ஒப்புகைச் சீட்டுவாக்காளர்களுக்கு தரப்படாது என்றவவர்,  அந்தச் சீட்டு தானாகவே இயந்திரத்திற்குள் விழுந்து விடும் என்றும்,  வாக்கு எண்ணிக்கையில் வித்தியாசம் இருப்பதாக புகார் எழுந்தால், இந்தச் சீட்டை சரிபார்த்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  பொதுமக்கள்  வாக்குபதிவு செய்து, யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்தனர்.

அதைத்தொடர்ந்து பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப் பிரதா சாஹு, தமிழகத்தில் உங்ளள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இதுபோன்ற செயல்விளக்க வாக்குபதிவு பயிற்சி நடைபெறும்  என்று தெரிவித்தார்.

மேலும்,  நாடாளுமன்றத் தேர்தலுடன் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான  இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் தேர்தலை நடத்த தாங்கள் தயார் என்றார்.

அதைத்தொடர்ந்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன்,  சென்னையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடுத்த 10 நாட்களுக்கு இந்த பயிற்சி நடைபெறும் என தெரிவித்தார்.