தமிழக முதல்வர் பெயரில் இயங்கி வந்த காப்பீடு திட்டம் இனி பிரதமர் பெயரில் இயங்கும்: பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

நாகர்கோவில்:

மிழகத்தில், தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் என்று செயல்பட்டு வந்த ஹெல்த் பாலிசி இனிமேல்  பிரதமர் பெயரில் இயங்கும் என மத்திய இணையமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன்  கூறி உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மத்திய அரசின் ராஷ்டிரிய வயோஸ்ரீ யோஜனா திட்டத்தின் கீழ் மாற்றுத்திறன் படைத்த பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், “நாடு முழுவதும் 50 கோடி ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மருத்துவ பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு பேசினார்.

மேலும், தமிழகத்தில் ஏற்கனவே  முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் இயங்கி வந்த காப்பீடு திட்டம் இனி பிரதமர் பெயரில் இயங்கும் என்றும் கூறினார்.

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை தேவைகளை மனதில் கொண்டு பல்வேறு நல திட்டங்கள் நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி வருகிறார். பல லட்சம் ரூபாய் செலவில் செய்யும் காது கேளாதவர்களுக்கான இலவச அறுவை சிகிச்சை உள்ளிட்ட நன்மை பயக்கும் பல திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே திமுக ஆட்சியின்போது, உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீடு திட்டம் என்ற பெயரில் மெடிக்கல் பாலிசி நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆனால், பின்னர் அதிமுக ஆட்சியில், மெடிக்கல் இன்சூரன்சில் மேலும் சில சிகிச்சைகளை இணைத்து,  பாலிசி பெயரை மாற்றி, தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மாற்றினார்.

இந்த நிலையில், தற்போது, மோடி தொடங்கி உள்ள மோடி கேர் மெடிக்கல் பாலிசி காரணமாக, தமிழக முதலமைச்சரின்  மருத்துவ காப்பீடு திட்டம் இனிமேல் மோடி கேர் காப்பீட்டு திட்டமாக மாறுகிறது.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Tamilnadu chief minister comprehensive health insurance scheme name will change in to Modicare health insurance scheme... said Union Minister Pon.Radha Krishnan, தமிழக முதல்வர் பெயரில் இயங்கி வந்த காப்பீடு திட்டம் இனி பிரதமர் பெயரில் இயங்கும்: பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்
-=-