சென்னை,

ல்லிக்கட்டு தொடர்பாக நாளை பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அரசியல் கட்சிகளின் ஆதரவின்றி தன்னிச்சையாக இளைஞர்கள் ஒன்றுகூடி இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

தமிழக முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் வலுவடைந்து வருகிறது.

சென்னை மெரினாவில் கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூடி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷமிட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக மாநில  அரசு செய்வதறியாது திகைத்து வருகிறது. மத்திய அரசும், தமிழக இளைஞர்களின் எழுச்சிமிகு போராட்டத்தால் கலங்கி நிற்கிறது.

இதையடுத்து, ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டத்தை பிறப்பிக்க வலியுறுத்தி நாளை பிரதமரை நேரில் சந்திக்க இருக்கிறார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

அப்போது ஜல்லிக்கட்டு நடத்த தேவையான நடவடிக்கை உடனே மேற்கொள்ளும்படியும், காளைகளை பட்டியலில் இருந்து நீக்கி அவசர சட்டம் பிறப்பிக்கவும் வலியுறுத்துவார் என தெரிகிறது.

இதற்காக அவர் நாளை காலை விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

இதையடுத்து, அனைவரும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும், சட்டத்திருத்தத்தை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது என்றும் முதல்வர் பன்னீர்செல்வம் கூறி உள்ளார்