சென்னை,

மிழக அமைச்சர்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் முதல்வர் எடப்பாடியின் படம் வைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து டில்லியில் உள்ள தமிழக அரசின் புதிய விடுதியிலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் படம் வைக்கப்பட்டுள்ளது.

இரட்டை இலை வழக்கில் இருந்து தினகரன் வெளியானதும், அதிமுகவில் தீவிரமாக ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அமைச்சர்களிடையே அணியில் எழுந்த எதிர்ப்பு, அதைத் தொடர்ந்து எடப்பாடி அரசின் 100 நாட்கள் ஆகியவற்றை தொடர்ந்து அமைச்சர்கள் அறையில் முதல்வரின் படம் மாட்டப்பட்டது.

தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏக்களின் அறையிலும் முதலமைச்சர் பழனிசாமி படம் வைக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி தலைமையிலான  100 நாட்கள் ஆட்சி கடந்த நிலையில் அமைச்சர்கள் அறையில் முதலமைச்சர் படம் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

தலைமைச்செயலகத்தில் அனைத்து அமைச்சர்களின் அறையிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் படம் வைக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர். ஜெயலலிதா வரிசையில் தற்போது எடப்பாடி படமும் வைக்கப்பட்டுள்ளது. தற்போது டில்லியில் உள்ள தமிழக அரசு புதிய இல்லத்திலும் முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமியின்  படம் வைக்கப்பட்டு உள்ளது.

இது டில்லி அரசியலில் முதல்வர் எடப்பாடியின் தைரியம் குறித்து விவாதிக்கப்படுகிறது,.