சென்னை:
மிழகத்தில் புதிதாக அரியலூரில் தொடங்கப்பட  உள்ள  மருத்துவக்கல்லூரிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

தமிழகத்தில் மொத்தம் 23 மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் வழங்கியது. அதன்படி ராமநாதபுரம், திருப்பூர், நீலகிரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளது.
ஏற்கனவே 9 மருத்துவக்கல்லூரிகள் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில், இன்று 10வதாக  அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் தெற்கு கிராம பகுதியில் அமைய  உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
அரியலூரில்  ரூ.347 கோடி செலவில் 10.83 ஹெக்டர் நிலப்பரப்பில் கட்டப்பட உள்ள இந்த மருத்துவமனை உள்ளது. இதற்கான  மொத்த செலவில் மத்திய அரசின் பங்களிப்பாக 60 சதவீத நிதியும், மாநில அரசின் பங்களிப்பாக 40 சதவீத நிதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும்போது, தமிழகத்திற்கு மேலும் 150 மருத்துவப்படிப்புக்கான இடங்கள் கிடைக்கும்.