பிரதமர் மோடியை சந்தித்தார் எடப்பாடி: கஜா பாதித்த பகுதிகளை பேரிடர் பாதிப்பாக அறிவிக்க கோரிக்கை

சென்னை:

நேற்று பிற்பகல் டில்லி சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 10 மணிக்கு பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

அப்போது கஜா பாதிப்புக்குள்ளான பகுதிகளை பேரிடர் பாதிப்பாக அறிவிக்க கோரியும், கஜா புயல் தொடர்பான அறிக்கையை கொடுத்து புயல் நிவாரணம் உடனடியாக வழங்க கோரியும் வற்புறுத்தினார்.

பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிச்சாமி

மிழகத்தில் பேரழிவை ஏற்படுத்தி உள்ள கஜா புயல் பாதிப்புக்கு நிவாரணம் கோரி நேற்று மாலை டில்லி பயணமாகி உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  இன்று காலை பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது, கடந்த  15-ம் தேதி தமிழகத்தை சூறையபாடிய  கஜா புயலினால் ஏற்பட்ட பேரழிவு மற்றும் தமிழக அரசு எடுத்து வரும் நிவாரண பணிகள் குறித்து விளக்கினார். மத்திய அரசு புயல் பாதிப்புக்கு தாராளமான நிதி வழங்க வேண்டும் என்று கூறியவர்,

புயல் பாதிப்பை சரி செய்ய தமிழக அரசுக்கு விரைவாக நிதி ஒதுக்க பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.  கஜா புயல் தாக்கிய மாவட்டங்களை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும் கோரிக்கை வைத்தார்.

கஜாவில் ஏற்பட்டுள்ள சேத பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த மத்திய பேரிடர் ஆய்வுக்குழு விரைந்து தமிழகம் வர கோரிக்கை விடுத்தார்.

முன்னதாக தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த பழனிச்சாமி,நேற்று இரவு அதிமுக எம்.பி.க்கள் தம்பித்துரை உள்பட அனைவருடன் ஆலோசனை நடத்தினார்.

முதல்வருடன் சென்ற அதிகாரிகள் கஜா புயல் பாதிப்பு தொடர்பான விவரங்களை உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு சமர்ப்பித்துள்ளது. அதில்,  கஜா புயல் நிவாரணத்துக்கு தமிழக அரசு ரூ.14 ஆயிரம் கோடி நிதி கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.