கஜா நிவாரணம்: பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி

--

சென்னை:

மிழகத்தில் பேரழிவை ஏற்படுத்தி உள்ள கஜா புயல் பாதிப்புக்கு நிவாரணம் கோரி நேற்று மாலை டில்லி பயணமாகி உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  இன்று முற்பகல் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

அப்போது கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1,500 கோடியை  முதல்கட்டமாக உடனடியாக வழங்கக்கோரி மோடியிடம் வற்புறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடி – மோடி சந்திப்பு (பைல் படம்)

கடந்த  15-ம் தேதி தமிழகத்தை சூறையபாடிய  கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்பட பல மாவட்டங்களை சின்னாப்பின்னமாக்கி சிதைத்து சென்றுள்ளது.

புயலால் சேதமடைந்த பகுதிகளில்நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. இடையே மீண்டும் மழை பெய்வதால், நிவாரண பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசு 1000 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது.

இந்த நிலையில் புயல் நிவாரண நிதி கேட்டும், மத்திய அரசு அதிகாரிகள் புயல் சேதத்தை பார்வையிட வலியுறுத்தவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை விமானம் மூலம் டில்லி சென்றார்.

டில்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த பழனிச்சாமி,நேற்று இரவு அதிமுக எம்.பி.க்கள் தம்பித்துரை உள்பட அனைவருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில, இன்று முற்பகல்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். அப்போது, கஜா புயல் சேதத்துக்கு முதல்கட்டமாக 1500 கோடி ரூபாய் உடடினயாக வழங்க் வற்புறுத்த இருக்கிறார். முதல்வருடன் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் சென்றுள்ளனர்.

அதுபோல கஜா  புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்டத்திற்கு நிவாரண நிதி கோருவதற்காக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் டில்லி சென்றுள்ளார். அவரும் இன்று பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார்.