சென்னை,

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியே தீர வேண்டும் என்று இளைஞர்களும், மாணவர்களும் சிலிர்த்தெழுந்து நடத்திய கட்டுக்கோப்பான போராட்டத்த்தின் எதிரொலியாக அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன. உள்துறை அமைச்சகம் அவசர சட்டத்துக்கு அனுமதி அளித்து தமிழக அரசுக்கு அனுப்பியது. இன்று மாலை 4.30 மணியளிவில் இதற்கான அவசரச்சட்டத்தை தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் பிரகடனம் செய்தார். இதையடுத்து நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அங்கு வாடிவாசல் உள்ளிட்ட ஏற்பாடுகள் மதுரை கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த அலங்காநல்லூர் தயார் நிலையில் உள்ளது இந்நிலையில், நேற்று சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஜல்லிக்கட்டு போட்டியை நானே தொடங்கி வைப்பேன் என்று அறிவித்திருந்தார். அதனால் இன்று இரவு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விமானம் மூலம் மதுரை புறப்பட்டுச் செல்கிறார். நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைப்பார் என்றும் கூறப்படுகிறது.