சென்னை,

ஸ்மார்ட்   கொரட்டூரில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு ரேஷன் கார்டு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் பழனிச்சாமி.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படாமல் பழைய குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் இருந்து வந்தது.

கடந்த முறை ஜெயலலிதா முதல்வராக வந்தவுடன் 2017 முதல் ரேஷன் கார்டுக்கு பதில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து ரேஷன் கார்டுடன் ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்  இணைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணி முடிவடைந்த பகுதிகளில் ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணி நடைபெற்றது.

இதற்கிடையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, ஸ்மார்டு பணியில் தொய்வு ஏற்பட்டது. அதையடுத்து  தற்போது ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி சென்னை கொரட்டூரில் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இன்று  முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளதால், ஏப்ரல் 15-ம் தேதி வரை ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுப்பு கிடையாது என பொது விநியோகத்துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.