டில்லியில் மோடியுடன் பழனிச்சாமி சந்திப்பு!

டில்லி,

நேற்று இரவு டில்லி சென்ற தமிழக முதல் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இருவரும் சுமார் அரை மணி நேரம் தனியாக பேசியதாக கூறப்படுகிறது.

அதிமுக இரண்டாக உடைந்ததை தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் மத்திய அரசை போட்டிப்போட்டிக்கொண்டு ஆதரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் ஓபிஎஸ் திடீரென டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்த எடப்பாடி  பழனிச்சாமியும் பிரதமரை சந்திக்க நேற்று மாலை டில்லி சென்றார்.

அதைத்தொடர்ந்து இன்று காலை 11.15 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் சூழ்நிலை, , ஜனாதிபதி தேர்தல் குறித்தும், தமிழக நிதி, நீட் தேர்வு, மீனவர்கள் பிரச்சினை குறித்து பேசியதாக கூறப்பட்டது.

முதல்வர் பழனிசாமியிடன்   அமைச்சர் தங்கமணி, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரும் சென்றுள்ளனர்.

You may have missed