கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை: தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் கமிஷன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

டில்லி:

மிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடப்பதாக தொடரப்பட்ட வழக்கில் மதுரை ஐகோர்ட்டு கிளை தேர்தலுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், கூட்டுறவு சங்க தேர்தலுக்கு  மதுரை உயர்நீதி மன்றம் விதித்த தடையை எதிர்த்து, ட்டுறவு சங்க தேர்தல் கமிஷன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அதில், கூட்டுறவு சங்க தேர்தல் விதிமுறைகள் படி, தேர்தல் நடவடிக்கைகளில் உயர்நீதி மன்றம் தடை விதிக்க முடியாது என்றும், மதுரை உயர்நீதி மன்றத்தில் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று  கூட்டுறவு சங்க தேர்தல் கமிஷன் சார்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள 18,435 கூட்டுறவு சங்கங்களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி இரு கட்ட தேர்தல்கள் முடிவடைந்து உள்ளன. இந்நிலையில், தேர்தல் நடைமுறைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரரித்த நீதிமன்றம்,  தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்கவும், 3, 4, மற்றும் 5 வது கட்ட தேர்தல்களை நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டது.

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தின் தடைக்கு எதிராக கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.